சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ, இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச தளங்களிலும், அற்புதமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இந்த அறிவிப்பு வீடியோவானது இணையதளங்களில் வெறும் 24 மணி நேரத்தில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற, கோலிவுட்டின் முதல் அறிவிப்பு வீடியோவாக ‘கேப்டன் மில்லர்’ புதிய சாதனையைப் படைத்துள்ளது.
‘கேப்டன் மில்லர்’ படம் மொழி எல்லைகளை கடந்து, அனைத்து திரை ரசிகர்களிடமும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோஹர், தனது ட்விட்டர் பக்கத்தில், 'இப்படம் காவியமாக இருக்கப்போகிறது' என அறிவிப்பு வீடியோவினை பாராட்டி பதிவிட்டுள்ளார்.