தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஆர்ப்பரித்த ரசிகர்கள் கூட்டம்... தப்பித்து தெறித்து ஓடிய தனுஷ்... - thiruchitrambalam

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் இன்று(ஆக.18) வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தைத் திரையரங்கில் காண வந்த தனுஷ் ரசிகர்களின் ஆர்ப்பரித்த கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க விரைந்து ஓடினார்.

ஆர்பரித்த ரசிகர்கள் கூட்டம்.., தப்பித்து ஓடிய தனுஷ்...!
ஆர்பரித்த ரசிகர்கள் கூட்டம்.., தப்பித்து ஓடிய தனுஷ்...!

By

Published : Aug 18, 2022, 8:35 PM IST

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ’திருச்சிற்றம்பலம்’. இந்தப் படம் தனுஷ் நடிப்பில் வெகுநாட்களுக்குப் பிறகு வெளியாகும் திரைப்படமாகும்.

கடைசியாக தனுஷ் நடிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ’கர்ணன்’ திரைப்படம் திரையரங்கில் வெளியானது. ஆகையால் வெகுநாட்களுக்குப் பிறகு தங்களின் ஆதர்ச நாயகனைத் திரையில் காணப் போகிறோம் என்கிற உற்சாகத்தில் தமிழ்நாடெங்குமுள்ள தனுஷ் ரசிகர்கள் மேள தாள கொண்டாட்டங்களுடன் முதல் காட்சியைக் காணச் சென்றனர்.

இந்நிலையில், தன்னுடைய திரைப்படத்தை ரசிகர்களுடன் காண ரோகிணி திரையரங்கிற்கு வந்த நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ராஷி கண்ணா, ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் கூட்ட நெரிசலில் திரையரங்கை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

அதன் பின் ஒரு வழியாக அந்தக் கூட்ட நெரிசலிலிருந்து தப்பித்து ஓடி காரில் ஏறிச் சென்றனர். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இதற்கு அடுத்த காட்சியில் ரோகிணி திரையரங்கின் ஸ்கிரீன் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் கிழிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பரித்த ரசிகர்கள் கூட்டம்... தப்பித்து தெறித்து ஓடிய தனுஷ்...

இதையும் படிங்க: வெளியானது தனுஷின் திருச்சிற்றம்பலம்... ரசிகர்கள் கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details