தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தனுஷ் சினிமாவிற்கு நடிக்க வந்து 20 வருடங்கள் கடந்து விட்டன. ஆரம்பத்தில் பல கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான அவர் இன்று பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கி வருகிறார். இந்நிலையில் தான் சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் கடந்ததை அடுத்து அவர் சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் தான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு தன்னுடைய அண்ணன் செல்வராகவன் மற்றும் தந்தை கஸ்தூரிராஜா, குடும்ப உறுப்பினர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் அனைவரும் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்திருந்தார்.
இவ்வளவு பேருக்கு நன்றி சொல்லிய அவர் சினிமாவில் அவரை ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லையே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒருவேளை அவர் ரஜினியைப் பற்றி சொல்வதற்கு மறந்து விட்டாரா அல்லது மறைத்து விட்டாரா என்று தெரியவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
2019ல் தனுஷ் வெளியிட்ட அறிக்கை ஆனால், இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு திரைத்துறையில் தனது 17 ஆம் ஆண்டு நிறைவடைந்ததற்கும் இதேபோல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ரஜினியின் பெயரோ, குடும்பத்தினரின் பெயரோ குறிப்பிடாமல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'சினிமாவில் 20 ஆண்டுகள். நான் இந்த அளவிற்கு வருவேன் என்று நினைத்துகூடப் பார்த்ததில்லை' - நன்றி கூறிய தனுஷ்