நடிகர் தனுஷ், மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் மூலம் பிரபலமான ரூஸோ பிரதர்ஸ் (ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ) இயக்கும் 'தி க்ரே மேன்' என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்தப் படத்தின் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாக உள்ளது.
மேலும் இப்படத்தின் பிரமோஷன் வேலைகள் நடைபெற தொடங்கிவிட்டன, இதன்படி அப்படத்தின் இயக்குனர்கள் இந்தியா வரவுள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் நேற்று அமேரிக்காவில் ’தி க்ரே மேன்’ படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் மற்றும் படத்தில் நடித்த மற்ற நடிகர்கள், என அனைவரும் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்கள் இப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து கேட்ட போது, ”நான் எப்படி இந்த படத்தில் நடிக்க வந்தேன் என்றே தெரியவில்லை”, என கூறினார். இந்த பதில் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை கிளப்பியது.