சென்னை: கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரங்களை ஆட்டுவிக்கும் பிரபல நடன இயக்குநர் ஷோபி, அவரது மனைவியும் நடன இயக்குநருமான லலிதா ஷோபி இருவரும் தங்களது மகள் சியமந்தகமணி அஷ்விகா ஷோபி உடன் இன்று (ஜூன் 19) கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். அப்போது “விக்ரம்” பட வெற்றிக்கு தங்களது வாழ்த்துகளை கூறியதுடன், அவரிடம் ஆசி பெற்றனர்.
கமலிடம் ஆசி பெற்ற நடன இயக்குநர்கள் - நடன இயக்குநர் சோபி
“விக்ரம்” பட வெற்றிக்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபி கமலிடம் ஆசி பெற்றனர்.
![கமலிடம் ஆசி பெற்ற நடன இயக்குநர்கள் கமலிடம் ஆசி பெற்ற நடன இயக்குனர் !](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15604523-thumbnail-3x2-kamalhasan.jpg)
கமலிடம் ஆசி பெற்ற நடன இயக்குனர் !
ஷோபி, 2004ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத் துறையில் அறிமுகமானவர். இவரது மனைவி லலிதா ஷோபி கர்ப்பிணியாக உள்ளதால், திரைத்துறையில் தனக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் உள்ள கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற வைத்தார்.
இதையும் படிங்க: நயன் ஹனிமூன் எங்கே தெரியுமா?: கணவர் விக்கி உடைத்த சஸ்பென்ஸ்!
Last Updated : Jun 19, 2022, 10:36 PM IST