தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

மூத்த நடனக் கலைஞர்களை கௌரவிக்க ஏற்பாடு - விரைவில் விருது வழங்கும் விழா! - tamil cinema news

தமிழ் சினிமாவில் முன்னாள் நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் Dance Don Guru Steps 2023 விருது வழங்கும் விழா டிசம்பர் மாதம் 30ஆம் தேதி நடைபெற உள்ளதாக நடன இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.

முன்னாள் நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் விழா
முன்னாள் நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் விழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 5:57 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் வகையிலும் Dance Don Guru Steps 2023 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30ஆம் தேதி நடனக் கலைஞர் கலைமாமணி நடன இயக்குநர் ஶ்ரீதர் தலைமையில், எண்ணற்ற திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடன இயக்குநர்கள் ஶ்ரீதர், அசோக், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடன இயக்குநர் ஸ்ரீதர், "உலகளவில் இந்திய சினிமா ஆடல் கலை மற்றும் பாடலுக்கு பெயர் பெற்றது. ஆடலும், பாடலும் இல்லாமல் இந்திய சினிமா இல்லை.

இங்கு சினிமா உருவானதில் இருந்து ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக சினிமாவில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடனக் கலையை பயிற்றுவிக்கும் நடன கலைஞர்களின் பணி அளப்பரியது. இத்தனை புகழ்மிக்க நடனக் கலையை ஆரம்ப காலத்தில் பயிற்றுவித்த பல புகழ்மிகு நடனக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் இல்லை.

1950களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த் திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். இன்றைய நவீன டிஜிட்டல் உலகைப் போல அவர்களைப் பற்றிய அறிமுகங்களோ, விவரங்களோ, அனைவருக்கும் தெரிந்ததில்லை. திரையுலகில் பணியாற்றும் நடனக் கலைஞர்களுக்கே நம் முந்தைய தலைமுறையின் ஆரம்பத்தில் புகழுடன் பணியாற்றிய நடனக் கலைஞர்களின் விவரங்கள் தெரிவதில்லை.

நம் தலைமுறையில் நமக்கு முன் சாதித்து காட்டிய நடனக் கலைஞர்களை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைப் பற்றி வரலாற்றில் பதிவு செய்து, அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் இந்த டான்ஸ் டான் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்விழாவில் தமிழ் திரையுலகில் புகழுடன் பணியாற்றி மறைந்த நடனக் கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை நினைவு கூர்ந்து அவர்களின் புகழ் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் கௌரவிக்கப்பட உள்ளது.

மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் நடன கலைஞர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்பட உள்ளனர். மேலும் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட உள்ளனர். Dance Don Guru Steps 2023 விருது வழங்கும் விழாவை தமிழ்த் திரையுலகின் முன்னணி நடனக் கலைஞரான கலைமாமணி ஶ்ரீதர் முன்னின்று ஏற்பாடு செய்து நடத்துகிறார்.

வரும் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடக்க உள்ள இவ்விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி நடன கலைஞர்களுடன், தமிழ்த் திரைத்துறையின் பல முன்னணி இயக்குநர்கள் பங்கேற்கவுள்ளனர்" என்று கூறினார்

இதையும் படிங்க:மென்மையான குரல் மூலம் ரசிகர்களை சிலிர்க்க வைக்கும் இசை அரசன் ஜி.வி.பிரகாஷ் குமார்!

ABOUT THE AUTHOR

...view details