தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"டாடா" பர்ஸ்ட் லுக்... குழந்தையை சுமந்து செல்லும் கவின்... - அபர்ணாதாஸ் திரைப்படங்கள்

கவின்-அபர்ணாதாஸ் நடிக்கும் "டாடா" திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

DADA
DADA

By

Published : Apr 22, 2022, 6:24 PM IST

சென்னை: ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் படம் "டாடா" (Dada). அறிமுக இயக்குநர் கணேஷ் K.பாபு இயக்கும் இப்படத்தில் நடிகர் கவின், நடிகை அபர்ணாதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் கே.பாக்யராஜ் - ஐஸ்வர்யா ஜோடி 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல் "முதல் நீ முடிவும் நீ" படப்புகழ் ஹரிஷ், "வாழ்" படப்புகழ் பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்த படம் நவீனகால பின்னணியில், கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்ச்சிகரமான காதல் கதையாக உருவாகி வருகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.

முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கவின், அதில், "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" என்னும் வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க: 30 ஆண்டுகளுக்கு பின் இணையும் எவர்கிரீன் ஜோடி...!

ABOUT THE AUTHOR

...view details