சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்து வரும் திரைப்படம் லவ் டுடே. இந்த திரைப்படத்தின் இயக்குநரும் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் குறித்து நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
சில வருடங்களுக்கு முன் பிரதீப் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் ,நடிகர் விஜய் போன்றோரை விமர்சித்ததாகவும் அவதூறாக பேசியதாகவும் அவர் பெயரினுடைய அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்கள் இணையத்தில் நெட்டிசன்களால் தோண்டி எடுக்கப்பட்டு , பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இது இணையத்தில் கடந்த இரு தினங்களாக பேசு பொருளாக மாறியது மட்டுமல்லாமல், சர்ச்சையும் கிளப்பியது.
இந்நிலையில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய முகநூல் பக்கத்தை மொத்தமாக மூடியதால் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.