லாஸ் ஏஞ்சல்ஸ்:இயக்குநர் ராஜமௌலியின் பிரம்மாண்டப் படமான 'ஆர்ஆர்ஆர்' சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதை வென்றுள்ளது. இந்த விருதுடன் சிறந்த பாடலுக்கான கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதும் Naatu Naatu பாடலுக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை இயக்குநர் ராஜமௌலி பெற்றுக்கொண்டார். முன்னதாக, நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதை பெற்றிருந்தது. இப்போது மேலும் ஒரு விருது அந்த பாடலுக்கு கிடைத்துள்ளது.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி, ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி மற்றும் ஒலிவியா மோரிஸ் நடிப்பில் உருவானது.