தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகராக அவதாரமெடுக்கும் அரசியல்வாதி..! இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசனின் அதிரடி.. - R Mutharasan starrer arisis movie

cpi secretary R Mutharasan: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அரிசி' எனும் படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

நடிகராக களமிறங்கினார் இரா முத்தரசன்
நடிகராக களமிறங்கினார் இரா முத்தரசன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 6:57 PM IST

சென்னை:இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், S.A.விஜயகுமார் என்பவர் இயக்கத்தில் 'அரிசி' எனும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை மோனிகா புரடக்‌ஷன் சார்பில் P.சண்முகம் தயாரிக்கிறார். மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார்.

இப்படத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விவசாயி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அவரின் மனைவி கதாபாத்திரத்தில் ரஷ்யா மாயன் என்பவர் நடிக்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் 'அரிசி' படத்தில் ஜான்சன் ஒளிப்பதிப்பாளராகவும் , அசோக் சார்லஸ் படத்தொகுப்பாளராகவும், சேது ரமேஷ் கலை இயக்குநராகவும் பணி புரிகின்றனர். மேலும், இப்படத்தில் சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: "33 வருடங்களுக்குப் பிறகு வழிகாட்டி அமிதாப்பச்சனுடன் பணியாற்றுவதில் இதயம் துள்ளுகிறது" - ரஜினிகாந்த்!

'அரிசி' படத்தின் இயக்குநர் S.A.விஜயகுமார், பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'அரிசி' படத்தை குறித்து இயக்குநர் S.A.விஜயகுமார் கூறியதாவது, "இப்படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம். அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல, அது மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இத்தலைமுறைக்கு எடுத்து சொல்வதே 'அரிசி' படத்தின் சிறப்பு.

மேலும், இப்படத்தில் விவசாயியாக நடித்திருக்கும் தோழர் இரா. முத்தரசன், அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகே உள்ள கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. அக்கிராம மக்களும் விவசாயிகளும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்" என்று கூறினார்.

தற்போது 'அரிசி' படத்தின் படப்பிடிப்பு தளத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விவசாயி வேடத்தில் துணை நடிகர்களுடன் பணிபுரியும் புகைப்படங்கள் வெளியாகியதை அடுத்து, அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 31 years of Devar Magan : சர்ச்சையும், பாராட்டும் சம அளவில் பெற்ற 'தேவர் மகன்'... 2ம் பாகம் எப்போது?

ABOUT THE AUTHOR

...view details