தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திருமண வரவேற்பு விழாவில் போன் செய்த நடிகர் சூர்யா... நெகிழ்ந்த தம்பதி...

காஞ்சிபுரத்தை சேர்ந்த ரசிகரின் திருமண வரவேற்பு விழாவில் செல்போன் மூலம் வாழ்த்து தெரிவித்து நடிகர் சூர்யா, மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதை புரிந்துகொண்டு பேசிக்கொள்ள வேண்டும் என்று வழங்கினார்.

தம்பதியினர் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு மனம் விட்டு பேசி கொள்ள வேண்டும் - ரசிகரின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து
தம்பதியினர் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு மனம் விட்டு பேசி கொள்ள வேண்டும் - ரசிகரின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து

By

Published : Sep 3, 2022, 1:07 PM IST

காஞ்சிபுரத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் தீவிர சூர்யா ரசிகர். இவர் சூர்யா ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். அவருக்கும் லாவண்யா என்பவருக்கும் செப் 1ஆம் தேதி திருமணம் நடந்தது. அதன்பின் நேற்று திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் நடிகர் சூர்யா மணமக்கள் இருவருக்கும் திருமண வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

தம்பதியினர் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு மனம் விட்டு பேசி கொள்ள வேண்டும் - ரசிகரின் திருமணத்திற்கு நடிகர் சூர்யா வாழ்த்து

அதோடு மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு மனம் விட்டு பேசிக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். தான் ஒரு மாத காலம் வெளியூரில் இருப்பதால் பிறகு வந்து சந்திப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பான வீடியே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க:"இப்போது ஆட்டிட்டியூட் கிடையாது, கிராட்டிடியூட் தான்" - சிம்பு

ABOUT THE AUTHOR

...view details