தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம்வந்தவர் சிவ நாராயணமூர்த்தி. வடிவேலு, விவேக் உடன் ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை பூர்வீகமாக கொண்டவர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ள இவர் இன்று இரவு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு லோகேஷ், ராம்குமார் என 2 மகன்களும் ஸ்ரீதேவி எனும் மகளும் உள்ளனர். இவரது மனைவி பெயர் புஷ்பவல்லி.