பிரபல காமெடி நடிகர் 'போண்டா' மணி தமிழ்சினிமாவில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி காமெடி நடிகர்களான வடிவேலு, விவேக், கவுண்டமணி என அனைவருடனும் சேர்ந்து பணியாற்றியுள்ளார், 'போண்டா'மணி. இலங்கையைத் தாயகமாகக் கொண்ட 'போண்டா' மணியின் இயற்பெயர் கேதீஸ்வரன்.
சினிமாவிற்கு வாய்ப்பு தேடும் காலகட்டங்களில் வெறும் போண்டா, தண்ணீர் கொண்டே பசியாற்றிக்கொள்வாராம், 'போண்டா' மணி. இதனால் இயக்குநர் வி.சேகர் இவருக்கு வைத்த பெயர் தான் 'போண்டா மணி'.