‘செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ’ லலித் குமார் தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நாளை (ஜூலை 11) மாலை நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 10) இப்படத்தின் பாடல்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ”தும்பி துள்ளல்”, ”உயிர் உருகுதே” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.