தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ருத்ரன் பட பாடலுக்கு நடனமாடிய கலைஞர்களுக்கு சம்பள பாக்கி.. சினிமா ஏஜெண்ட் காவல் நிலையத்தில் புகார்!

சமீபத்தில் வெளியான 'ருத்ரன்' திரைப்படத்தில் நடித்த டான்ஸ் கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாக சினிமா ஏஜெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Rudhran movie
ருத்ரன்

By

Published : May 11, 2023, 1:24 PM IST

சென்னை: இயக்குநர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ருத்ரன்' (Rudhran). இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் அதிகளவு டான்ஸ் கலைஞர்களுடன் ‘பகை முடி’ என்ற பாடல் படமாக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த பாடல் காட்சியில் நடித்த பின்னணி நடிகர்கள் மற்றும் டான்ஸ் கலைஞர்களுக்கு சம்பள பாக்கி தராமல் ஏமாற்றி வருவதாக ஆட்கள் ஏற்பாடு செய்து கொடுத்த பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சினிமா ஏஜெண்ட் தன்ராஜ் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதாவது, கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி வரை 10 நாட்களாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளி வந்த 'ருத்ரன்' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்காக பின்னனி நடிகர்கள் மற்றும் ஆடல் கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், அதன் பின்பு அந்த காட்சியில் பணியாற்றிய ஒருவருக்கும் 10 நாட்களாகியும் சம்பளம் தரவில்லை என குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதனையடுத்து சம்பளம் பாக்கி தொடர்பாக பெப்சி உறுப்பினரான ஸ்ரீதர் என்பவரிடம் கேட்டபோது, இரண்டு நாட்களில் சம்பளம் வந்து சேரும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதன் பிறகும் சம்பளம் வராததால் திரைப்படத்தின் மேனேஜரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது என்னிடம் பேசினால் 10 பைசா கூட உங்களுக்கு தர முடியாது என அவதூறாக பேசியதாக தெரிவித்துள்ளனர்.

எனவே இது குறித்து பலமுறை பெப்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், ருத்ரன் திரைப்படத்தின் மேனேஜரிடம் கேட்டுள்ளனர். அப்போது முறையாக பதிலளிக்காமல், ராகவா லாரன்ஸ் அலுவலகத்திற்கு சென்று உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் 10 நாட்கள் கடுமையாக உழைத்த நடன மற்றும் பின்னணி நடிகர்களுக்கு சம்பளம் பாக்கி தராமல் ஏமாற்றி வரும் மெயின் ஏஜென்ட் ஸ்ரீதர் மற்றும் அந்த திரைப்படத்தின் மேனேஜர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை பெற்றுத் தருமாறு காவல் நிலையத்தில் புகாரில் அளித்துள்ளார். தற்போது அந்த புகார் அடிப்படையில், வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்காசியில் கனிம வளங்கள் கடத்தல் என பரவும் வீடியோ.. காவல்துறை நடவடிக்கை பாயுமா?

ABOUT THE AUTHOR

...view details