சென்னை:இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விக்ரம் உடன் பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆந்திர பிரசேத மாநிலத்தில் தொடங்கிய நிலையில், அதன்பின் சென்னையில் உள்ள பிலிம் சிட்டி ஸ்டுடியோவில் நடைபெற்று வந்தது. இத்திரைப்படம் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கதைக்களத்தை கொண்டுள்ளதால், குடிசைகள் நிறைந்த ஒரு பழங்கால கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.