தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

"சினம் எனக்கு மாறுபட்ட படம்" - அருண் விஜய் - அருண் விஜய் பாடியுள்ளார்

நடிகர் அருண் விஜயின் சினம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப். 4) சென்னையில் நடைபெற்றது.

Etv Bharatசினம் எனக்கு மாறுபட்ட படம் - அருண் விஜய்
Etv Bharatசினம் எனக்கு மாறுபட்ட படம் - அருண் விஜய்

By

Published : Sep 5, 2022, 7:38 AM IST

சென்னை:ஜிஎன்ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(செப்-4) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஹரி, மகிழ் திருமேனி, அறிவழகன், பார்த்திபன், நடிகர்கள் விஜய் ஆண்டனி, பிரசன்னா, விஜயகுமார், சாந்தனு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பார்த்திபன் பேசுகையில்:அருண் விஜய் அவரது அப்பாவின் தயவில் சினிமாவில் ஜெயிக்கவில்லை. தனிப்பட்ட முயற்சியால் வெற்றி பெற்றுள்ளார். இவ்வளவு அழகான போலீஸை நான் பார்த்ததில்லை என்றார்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசுகையில்:அருண் விஜய் நன்றாக பாடியுள்ளார். இதை எதிர்பார்க்கவில்லை. இன்னும் பல உயரங்களை அவர் தொடுவார். இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் நல்ல ஒளிப்பதிவாளரும் கூட என்றார்.

இயக்குநர் ஹரி பேசுகையில்: இந்த படத்தின் டிரெய்லர் நன்றாக உள்ளது. இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்றார்.

இறுதியாக அருண் விஜய் பேசுகையில்:இந்த படம் திரையரங்குகளில் வெளியாக வேண்டும் என்பதே ஒரு தயாரிப்பாளராக விருப்பமாக இருந்தது. நிறைய போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இது எனக்கு முற்றிலும் மாறுபட்டது. இயக்குநருக்கு நன்றி. உங்கள் எல்லோருக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும். இக்கதையை தயாரிக்க ஒப்புக்கொண்ட அப்பாவுக்கு நன்றி. இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

சினம் எனக்கு மாறுபட்ட படம் - அருண் விஜய்

இதையும் படிங்க:சினம் படத்திற்காக ஊர் சுற்றிய அருண் விஜய்..!

ABOUT THE AUTHOR

...view details