ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் சில்லா சில்லா என்ற பாடல் வருகின்ற 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வைசாக் வரிகளில் அனிருத் பாடியுள்ளதாக அறிவிப்பு வந்ததில் இருந்தே, இந்தப் பாடல் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறத் தொடங்கிவிட்டது.