சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. மேலும், இந்தத் திரைப்படம் கமல்ஹாசன் திரைவாழ்விலேயே மிகப்பெரிய வசூல் சாதனை செய்த படமாக மாறியுள்ளது என திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில், இந்த வெற்றியையடுத்து பல்வேறு நட்சத்திரங்கள் கமலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் நடிகர் சல்மான் கான் ஆகியோர் சமீபத்தில் கமல் ஹாசனையும் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.