20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று(டிச.15) தொடங்கியது. இம்மாதம் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா சென்னை தனியார் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 75 உலக சினிமாக்கள் திரையிடப்பட உள்ளன. குறிப்பாக 12 தமிழ் படங்களும், இந்தியன் பனோரமா பிரிவில் 15 இந்தியப் படங்கள் திரையிடப்பட உள்ள நிலையில் அதில் 3 தமிழ் படங்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த வகையில், தமிழ் திரைப்படங்களான பார்த்திபனின் ’இரவின் நிழல்’, சிம்புதேவனின் ’கசடதபற’, அசோக் வீரப்பனின் ’பஃபூன்’, ராம்நாத் பழனிகுமாரின் ’ஆதார்’, ஆர்.ஏ.வெங்கட்டின் ’கிடா’, கௌதம் ராமச்சந்திரன் இயக்கி சாய் பல்லவி நடித்த ’கார்கி’, சீனு ராமசாமியின் ’மாமனிதன்’, விக்னேஷ் இயக்கி நயன்தாரா நடித்த ’O2’, மனோ வி கண்ணதாசனின் ’இறுதி பக்கம்’, ஜெகன் விஜயாவின் ’BEGINNING’, பா.ரஞ்சித்தின் ’நட்சத்திரம் நகர்கிறது’, ஆனந்த ராஜனின் ’யுத்த காண்டம்’ என 12 தமிழ் திரைப்படஙகள் திரையிடப்பட உள்ளன.
இதன் தொடக்க விழாவில் தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு பேசியதாவது, “கடந்த ஆண்டு கரோனா பேரிடர் காலத்தினால் எல்லாம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சினிமா துறையும் பாதிக்கப்பட்டு தற்போது இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த ஆண்டில் அனைத்து விழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.