தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

தனுஷ் படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் இதுவா?

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் வீடியோ படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

தனுஷ் படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் இதுவா?
தனுஷ் படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் இதுவா?

By

Published : Jun 10, 2022, 6:21 PM IST

நடிகர் தனுஷை வைத்து 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' ஆகிய படங்களை இயக்கியவர், மித்ரன் ஜவஹர். இவர் தற்போது மீண்டும் நான்காவது முறையாக தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' எனும் படத்தை இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தினை ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

இந்நிலையில், இப்படத்தின் நடித்தவர்களின் கதாபாத்திரம் தயாரிப்பு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிரியா பவானி சங்கரின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு இன்று(ஜூன் 10) வெளியிட்டுள்ளது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், ‘ரஞ்சனி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் வீடியோவை தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நயன் - விக்கியின் புகைப்படகலைஞர்கள் திருப்பதி ஆலயத்தில் செருப்புடன் சென்றனரா?: தேவஸ்தானம் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details