வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனையொட்டி நடிகர் சிலம்பரசன் டிவிட்டர் ஸ்பேஸ் மூலமாக ரசிகர்கள் கேள்விக்கு நேற்று பதிலளித்தார்.
அப்போது சிலம்பரசன் பேசியது, என்ன படம் பண்ணாலும் ஒரு சிறிய பயம் இருக்கும். முதல் பட நடிகன் போல தற்போது உள்ளது. எப்படி மக்கள் இந்த படத்தை ஏற்று கொள்வார்கள் என்று உள்ளது. என்னுடைய ரசிகர்கள் இந்த படத்தை என்ஜாய் பண்ணும் அதே நேரத்தில் என்னால் முடிந்ததை கொடுத்துள்ளேன்.
ஜெயமோகன் இந்த கதையை சொன்ன பிறகு ஒரு புது பையன் தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றார். நான் ஏன் எப்போதும் ஒரு பெரிய நடிகர் என நினைக்க வேண்டும். அதனால் இந்த படத்தில் நடிக்க முடிவு செய்தேன். தமிழ் படம் என்பது தமிழ் மக்களுக்கு மட்டும் இல்லை. உலகம் முழுவதும் பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
வெற்றி தோல்வி நம் கையில் இல்லை. மக்கள் ஒரு படத்தை பார்க்கும் போது இந்த பையன் இதில் நல்லா வேலை செய்து இருக்கான் என்பதை உணர்ந்தால் போதும். படத்தின் நேரம் என்பது தற்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. அந்த படத்திற்கு தேவையான நேரத்தை தான் நாம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம்.
கௌதமிடம் பேசி படத்தின் நீளம் எவ்வளவு குறைக்க முடிந்ததோ அதை குறைத்து தான் இந்த படத்தை கொடுத்துள்ளோம். ரஹ்மான் அவர்களுக்கு என்மேல் தனி அன்பு உள்ளது. அதனால் பாடல்கள் மேலும் நன்றாக இருக்கிறது. சிறிய வயதில் அவருடைய இசை கருவிகளை எல்லாம் உடைத்து விடுவேன். அதனால் அப்போது இருந்தே என்னை அவருக்கு நல்லா தெரியும். ரஹ்மான் இந்த படத்திற்கு நிறைய மெனக்கெட்டு சில விஷயங்கள் செய்துள்ளார். இந்த படத்தில் நிறைய புதிய விஷயங்கள் செய்துள்ளோம்.
மாநாடு படத்தை ரசிகர்கள் புரியவில்லை என்று சொல்லி இருந்தால் அது தோல்வி படமாக மாறி இருக்கும். சில விஷயங்களை செய்ய முயற்சி செய்யும் போது நாம் ஏன் பயந்து அந்த விஷயத்தை செய்யாமல் இருக்க வேண்டும்.
ரியலான ஒரு படத்திலும் மக்கள் கைதட்ட வாய்ப்பு உள்ளது. இன்னும் எதார்த்தமாக இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். படம் வெளியான பிறகு ரசிகர்கள் சந்திக்க முயற்சி செய்கிறேன். கதை, இயக்குனர் அமைந்தால் கண்டிப்பாக அனிருத் உடன் இணைவேன். என்னுடைய 50வது திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் படம் இயக்க வாய்ப்பு உள்ளது"என்றார்.
இதையும் படிங்க:வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’: சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்