இயக்குநர் அட்லீயின் உதவி இயக்குநராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் 'டான்'. இப்படத்தில், இவருடன் பிரியங்கா மோகன், எஸ்ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியானது. இதன் பின்னர் ஜூன் 10ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் 'டான்' திரைப்படத்தைப் பாராட்டி பாமக நிறுவனர் ராமதாஸ், 'அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய திரைப்படம்' என ட்வீட் செய்துள்ளார்.