சென்னை: ரஜினி நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர்' படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. ராயப்பேட்டை உட்லாண்ட்ஸ் தியேட்டர் அருகே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பனையூரிலும் செட் அமைத்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதேபோல கமல், ஷங்கர் கூட்டணியின் 'இந்தியன் 2' ஷூட்டிங்கும் மீண்டும் இன்று சென்னையில் தொடங்கியது.
சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகம் அருகே உள்ள ஒரு பழைமைவாய்ந்த கட்டடத்தில் 'இந்தியன்2' ஷூட் பூஜையுடன் தொடங்கியது. பாபி சிம்ஹா சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. கமல் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். வருகிற 2ஆம் தேதிதான் அவர் சென்னை வருகிறார். அதன்பின், படப்பிடிப்பில் பங்கேற்கிறார் என்று தெரிகிறது.