மும்பை:பாலிவுட்டின் பிரபல ஜோடியான ஆலியா- ரன்பீர் கபூர் இருவரும் இந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். இன்று இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரன்பீர் மற்றும் ஆலியா பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி எளிமையான முறையில் மும்பையில் உள்ள வீட்டிலேயே திருமணம் செய்துகொண்டனர். இதனிடையே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரம் பான் இந்தியா படமாக வெளியானது. படத்திற்கான புரொமஷன் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
- https://www.instagram.com/p/CknJuW3LtxC/?utm_source=ig_web_copy_link