மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், என ஓர் நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்து நடித்திருக்கும் படம் ’பொன்னியின் செல்வன்’, இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தற்போது இந்தப் படத்தின் காட்சிக்குப் பின்னால் எடுக்கப்பட்ட காணொலி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அருள்மொழி வர்மன்’ கதாபாத்திரத்தை பற்றி இலக்கியவாதிகளும் படத்தில் பணியாற்றியவர்களும் பேசுவதாக காணொலி எடுக்கப்பட்டுள்ளது.