தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் 4 மொழிகளில் தயாராகும் 'தக்ஸ்' - nivin pauly

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு ' தக்ஸ்' என பெயரிடப்பட்டு அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் 4 மொழிகளில் தயாராகும் 'தக்ஸ்'
பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் 4 மொழிகளில் தயாராகும் 'தக்ஸ்'

By

Published : Jun 11, 2022, 12:43 PM IST

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்சன் திரைப்படத்திற்கு ' தக்ஸ்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்டனர்.

' தக்ஸ்' என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தை களப்பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இயக்குகிறார் பிருந்தா மாஸ்டர். அமேசான் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் வலைதள தொடரில் நடித்த நடிகர் ஹிர்ருது ஹாரூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் தேசிய விருது பெற்ற சிம்ஹா பிருந்தா மாஸ்டருடன் கரம் கோர்க்கிறார்.
மேலும் ஆர். கே. சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

பிரியேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார். தமிழை தவிர்த்து தெலுங்கு,இந்தி,கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அருள்நிதி பிறந்த நாளில் வெளியாகும் 'தேஜாவு.'

ABOUT THE AUTHOR

...view details