சென்னையில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி, நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ”தி வாரியர்” திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று (ஜூலை 6) நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம், ஆர்கே.செல்வமணி, விக்ரமன், பார்த்திபன், விஷால், எஸ்ஜே.சூர்யா, விஜய் மில்டன், பன்னீர்செல்வம், நடிகர் ஆர்யா, சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், பாலாஜி சக்திவேல், ஷங்கர், பாடலாசிரியர் விவேகா, நதியா, ராம் பொத்தினேனி, வசந்தபாலன், தேவி ஸ்ரீ பிரசாத், லிங்குசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய சினிமாவை பார்த்து பாலிவுட் பயத்தில் உள்ளது - விஷால் இந்த விழாவில் பேசிய விஷால், ”எனக்கும் லிங்குசாமிக்கும் 25 வருடங்களுக்கு மேல் பழக்கம். மேடையில் இருக்கும் பல பேர் எனக்கு நீண்ட வருடங்களாக பழக்கம். நான் ஒரு ஆக்சன் ஹீரோ ஆவதற்கு லிங்குசாமி தான் காரணம். இவர் அடிபட்ட புலி, இப்படத்தில் நிச்சயம் பாய்வார்.
ஒரு நண்பனாக வருடத்திற்கு ஒருபடம் இயக்க வேண்டும் என ஆசை. சினிமா மொழி பேதமின்றி அனைவரையும் வரவேற்கிறது. இப்போது தென்னிந்திய சினிமாவை பார்த்து பாலிவுட் பயந்துள்ளது”, என தெரிவித்தார்.
இதையும் படிங்க:”தி வாரியர்” திரைப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நிகழ்ச்சியில் கண்கலங்கிய லிங்குசாமி