சென்னை: இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, புலி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம், கசட தபற உள்ளிட்ட படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர், இயக்குநர் சிம்புதேவன். இதனையடுத்து சிம்புதேவன் யோகி பாபுவை கதாநாயகனாக வைத்து ‘போட்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் முழுவதும் கடலில் படமாக்கப்பட்டு, சர்வைவல் த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. டீசர் வெளியிட்டு விழா இன்று துபாயில் நடக்கிறது. போட் பட டீசரை தமிழில் விஜய் சேதுபதி வெளியிடுகிறார்.
டிமான்டி காலனி 2 டிரெய்லர்: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டிமான்டி காலனி 2’. இத்திரைப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.