தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நடிகர் அஜித்குமார் பிறந்த நாள் - பிரபலங்கள் வாழ்த்து! - நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர்

நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பக்கத்தில் அஜித்குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் பிறந்தநாள்
நடிகர் அஜித்குமார் பிறந்தநாள்

By

Published : May 1, 2022, 3:14 PM IST

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை ஒட்டி திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் அஜித் குமார் இன்று(மே.01) தனது 51-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் அவர் திரைத்துறைக்கு வந்து 30ஆண்டுகளைக் கடந்துள்ளது. இவரது பிறந்தநாளுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, ”பன்முகத் தன்மையும், தனக்கென்று தனிப் பாதையையும் தேர்ந்தெடுத்து அதில் பயணம் செய்து கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! எல்லாம் வல்ல இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அவருக்கு கொடுக்க வேண்டுகின்றேன்” என வாழ்த்தியுள்ளார்.

மேலும் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஓவியர் செல்வம் புதுமையான முறையில் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details