சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நடந்து முடிந்த 6-வது சீசனில் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லை அதற்குள் பெரிய பட்டாளத்துடன் தொடங்கியுள்ளது பிக் பாஸ் சீசன் 7. இந்த முறை ஒரு வீட்டிற்குப் பதிலாக இரு வீடுகளில் போட்டியாளர்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு விதமான டாஸ்க்குகள் வழங்கப்படவுள்ளன.
இந்த சீசனில் முதல் போட்டியாளராக கூல் சுரேஷை கண்பெஷன் அறைக்கு அழைத்து குழு தலைவர் குறித்துப் பேசினார் பிக் பாஸ். இம்முறை கேப்டன் பதவிக்கான ஆளை வித்தியாசமான முறையில் பிக் பாஸ் தேர்ந்தெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.