தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

செல்லப்பிராணிக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்த அமிதாப் பச்சன்! - சமூக வலைதளங்களில் இரங்கல்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது செல்லப்பிராணியான லாப்ரடார் நாயின் இறப்பை சமூக வலைதளங்களில் உருக்கமாக பகிர்ந்துள்ளார்.

Big
Big

By

Published : Nov 16, 2022, 12:25 PM IST

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வளர்த்து வந்த செல்லப்பிராணியான லாப்ரடார் நாய் இறந்துவிட்டது. தனது செல்லப்பிராணியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் அமிதாப் பச்சன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், "எங்களது சிறிய நண்பன், எங்களுடன் பல தருணங்களில் இருந்தவன். நன்றாக வளர்ந்த நிலையில், பிறகு ஒரு நாள் எங்களை பிரிந்து சென்றுவிட்டான்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். இறந்துபோன அவரது செல்லப்பிராணியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில், பச்சன் தனது லாப்ரடாரை கையில் வைத்திருப்பதை காணலாம்.

இந்த பதிவுக்கு ஏராளமானோர் லைக் மற்றும் கமென்ட்டுகளை போட்டு வருகின்றனர். 'செல்லப்பிராணிகள் மிகவும் விலைமதிப்பற்றவை என்றும்', 'செல்லப்பிராணிகள் கொடுக்கும் அன்புதான் தூய்மையான அன்பு' என்றும் அமிதாப் பச்சனின் ரசிகர்கள் கமென்ட் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: உடல்நிலை குறித்து மனம் திறந்த நடிகை சமந்தா - முழுபேட்டி!

ABOUT THE AUTHOR

...view details