அயன் முகர்ஜியின் உருவாக்கத்தில், சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து ’பிரம்மாஸ்திரம்’ எனும் படத்தின் முதல் பாடல் இன்று(ஜூலை 19) அறிமுகமாகியுள்ளது. இந்தப் பாடல் வாரணாசியின் மலைத்தொடர்களில் படமாக்கப்பட்டுள்ளது, இது இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடல்களில் ஒன்றாகும். இந்தப் பாடல் இன்று இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகியுள்ளது.
’பிரம்மாஸ்திரம் பாகம் ஒன்று’ படத்திற்கான பார்வையாளர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், படத்திலிருந்து வெளியாகும், ஒவ்வொரு டீஸரும், அது பாடலாக இருந்தாலும், விஷுவலாக இருந்தாலும் அல்லது ‘தி வேர்ல்ட் ஆஃப் அஸ்ட்ராஸ்’ பற்றிய சமீபத்திய கான்செப்ட் வீடியோவாக இருந்தாலும், படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் இன்னும் எகிறவைக்கும்படி அமைந்துள்ளது.
ஒரு டீஸர் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் பாடலைப் பற்றி நடிகர் ரன்பீர் கபூர் பேசுகையில், “பாடலின் புத்துணர்ச்சி பார்வையாளர்களிடையே நன்றாக எதிரொலித்தது. எண்ணற்ற இதயங்களைத் தொட்ட ஒரு பாடலை உருவாக்கியதற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் முழு பாடலின் அனுபவத்தைப் பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன்” எனப் பேசினார்.