தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

'வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' கம்பேக் கொடுத்த பாரதிராஜா! - Bharathiraja Health Update News

உடல் நலக்குறைவு காரணமாக சில மாதங்கள் ஓய்வில் இருந்த இயக்குனர் பாரதிராஜா இயக்குனர் தங்கர் பச்சானின் 'கருமேகங்கள் கலைகின்றன' படப்பிடிப்பில் பங்கேற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய பாரதிராஜா
மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய பாரதிராஜா

By

Published : Dec 15, 2022, 6:59 AM IST

Updated : Dec 15, 2022, 10:20 AM IST

சென்னை: இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா சில மாதங்கள் ஓய்விலிருந்தார்.

முன்னதாக தங்கர் பச்சான் இயக்கத்தில் ’கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். அவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளும் முடங்கின. இதனையடுத்து உடல்நலம் சிறிது தேறி வந்த பாரதிராஜா தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இதுகுறித்து தங்கர் பச்சான் கூறியதாவது, "ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கே எப்போதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப்படத்தைச் சிதையாமல் உருவாக்கிட பாடுபடுகிறேன். பாதிக்கு மேல் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் பாரதிராஜாவின் உடல்நலம் குன்றியதால் அனைத்து பணிகளும் கடந்த 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் இப்போது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எண்ணற்ற இடையூறுகளைத் தாண்டி ஒவ்வொரு நாளும் முழுமூச்சுடன் உழைத்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளோடு என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பயத்துக்கே பயம் காட்றவன் : "15 years of Billa" - ரசிகர்கள் கொண்டாட்டம்!

Last Updated : Dec 15, 2022, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details