தமிழ்நாடு

tamil nadu

இந்தியில் பேசிய பயங்கரவாதி, தமிழ் கத்துகிட்டு வா என்ற விஜய்: மீம்ஸ்கள் வைரல்

By

Published : Apr 13, 2022, 2:39 PM IST

பீஸ்ட் திரைப்படத்தில் விஜய் பேசிய “போய் தமிழ் கத்துக்கிட்டு வா...” போன்ற வசனங்கள் சமூக வலை தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

தீவிரவாதியிடம் “ தமிழ் கட்டுக்குத்து வா..” என்ற விஜய் : மீம்ஸ்களில் வைரல்
தீவிரவாதியிடம் “ தமிழ் கட்டுக்குத்து வா..” என்ற விஜய் : மீம்ஸ்களில் வைரல்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படம் இன்று (ஏப்.13) வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.

படம் பார்த்த ரசிகர்கள் நெல்சனின் வழக்கமான பாணியில்தான் இப்படமும் உள்ளது என்றும் விஜய்க்காக ஒருமுறை பார்க்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், படத்தில் விஜய் பேசியுள்ள சில வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளன.

விஜய் ரா ஏஜென்ட் என்பதால் படத்தில் பட இடங்களில் விஜய் இந்தியில் பேசியுள்ளார். குறிப்பாக பயங்கரவாதி ஒருவரிடம் இந்தியில் பேசும் விஜய் பின்னர் தமிழில் பேசிவிட்டு ”சும்மா சும்மா உனக்கு இந்தியில் மொழிமாற்றம் பண்ண முடியாது. வேணும்னா தமிழ் கத்துகிட்டுவா..” என்பார். இந்த வசனம் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

அதேபோல் உங்க அரசியல் எல்லாம் இங்க வேண்டாம் என்றும் பேசியுள்ளார். மேலும், தேர்தல் தொடர்பான வசனங்களும் ”ஒருதடவ முடிவு பண்ணிட்டா என்பேச்ச நானே கேட்க மாட்டேன்..!” போன்ற வசனங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன.

இதையும் படிங்க: ஏ.ஆர். ரகுமானிற்கு பி.சி.ஸ்ரீராம் ஆதரவு : அண்ணாவை மேற்கோள்காட்டி ட்வீட்

ABOUT THE AUTHOR

...view details