சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை(ஏப்.13) முதல் வெளியாகிறது. 'டாக்டர்' படத்தை அடுத்து நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இப்படத்தில் விஜய் 'வீரராகவன்' என்கிற 'ரா' உளவுப்பிரிவு அலுவலராக நடித்துள்ளார். மேலும், பூஜா ஹெக்டே, யோகிபாபு, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சென்னையில் வணிக வளாகம் ஒன்று பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்படுகிறது. அதில் பிணைக்கைதிகளாய் சிக்கியுள்ளவர்களை விஜய் எவ்வாறு காப்பாற்றினார் என்பதே 'பீஸ்ட்' படத்தின் கதை.