தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா, சமீபத்தில் நடித்து வெளியான ‘அகண்டா’ திரைப்படம் நம் ஊர் நெட்டிசன்கள் மத்தியில் வழக்கமான பாலய்யாவின் படம் போல் பெரும்வாரியாக கலாய்க்கப்பட்டபோதும், அந்த மாநிலங்களில் பெரும் வசூலைப் பெற்றது. மேலும், அந்தத் திரைப்படம் பாலய்யா ரசிகர்களுக்கு விருந்தாகவும் அமைந்தது.
இந்நிலையில், அவர் நடித்த பெயரிடப்படாத 'NBK 107' படத்தின் டீஸர் இன்று(ஜூன் 9) பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு இணையத்தில் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இது பாலய்யா படம் ஆகையால், இதன் டீஸரில் அவரது ஸ்டைலில் அடுக்கடுக்காக பஞ்ச் வசனம் பேசி அடியாட்களைப் பறக்கவிடுகிறார், பாலய்யா.