சென்னை:நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தை கதை, திரைக்கதை எழுதி ரஜினியே தயாரித்திருந்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்திருந்தார். ரஜினி மிகவும் எதிர்பார்த்த இப்படம் அவருக்கு திருப்தியை கொடுத்த படமும் கூட.
இந்நிலையில் இப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 12-ம் தேதி அவர் நடித்த பாபா(BABA) திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு பல மாற்றங்களுடன் மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டது.