ஐதராபாத்:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை படமாக எடுக்கப்பட உள்ள நிலையில், அதை சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர்சவ்ரவ் கங்குலி. பல டெஸ்ட் போட்டிகளில் சதங்களை அடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த கங்குலி, கிரிக்கெட் உலகத்தில் தன் திறமையால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன், கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக வரவுள்ளது என தனது சமூக வலைதளங்களில் அறிவித்தார். கங்குலியும் தனது ரசிகர்களுக்காக "கிரிக்கெட் தான் என்னுடைய வாழ்க்கையில் எல்லாம். என்னை தலை நிமிர்ந்து நடக்க வைத்தது இது தான். இந்த கிரிக்கெட் பயணத்ததை எப்போதும் மறக்கமாட்டேன். என்னுடைய வாழ்க்கை அனுபவத்தை தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க உள்ளார் எனபதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது மிக மகிழ்ச்சியை அளிக்கிறது" என தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
பின்னர், அறிவிப்பு வெளியிட்டும் அதனுடைய பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் போனது. இந்நிலையில் மீண்டும் கங்குலியின் வாழ்க்கை பயணத்தை பயோபிக்காக உருவாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மே மாதம் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்ததாகவும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, நடக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் தமிழில் நடிகர் ஆர்.ஜே பாலாஜியின் வீட்ல விஷேசம் படத்தின் இந்தி பதிப்பில் நடித்து இருந்தார். இந்தாண்டு டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என தகவல் வெளிவந்துள்ளது.