தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரலாகும் 'அயலான்' பட 2து சிங்கிள்! - ayalaan first single

Ayalaan movie second single: ஏஆர் ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் இரண்டாவது சிங்கிள் ‘அயலா அயலா’ என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது

ஏஆர் ரகுமான் இசையில் வைரலாகும் அயலான் படத்தின் இரண்டாவது சிங்கிள்
ஏஆர் ரகுமான் இசையில் வைரலாகும் அயலான் படத்தின் இரண்டாவது சிங்கிள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 20, 2023, 9:24 PM IST

சென்னை: இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியனை மையமாக கொண்டு சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ’அயலான்’. இயக்குநர் ரவிக்குமார் ‘இன்று நேற்று நாளை’ என்ற டைம் டிராவல் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றார். டைம் டிராவல் என்னும் கடினமான கதைக்களத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு எளிதான முறையில் உருவாக்கியிருந்தார்.

இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அயலான் படத்தின் பணிகள் தொடங்கி பல்வேறு தடைகள் ஏற்படட்டதால் படத்தின் வெளியீடு தாமதமானது.

இந்த நிலையில் ஒருவழியாக 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படத்தில் வரும் ஏலியனுக்கு பிரபல நடிகர் சித்தார்த் டப்பிங் குரல் கொடுத்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்த அற்விப்பும் படத்தின்‌ மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

வேற்று கிரகத்தில் இருந்து வந்த ஏலியன் பற்றிய கதையாக அயலான் திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே டைம் ட்ராவல் கதையை மிகவும் சுவாரசியமாக வகையில் ரசிக்க வைத்த இயக்குநர் ரவிக்குமார் இப்படத்திலும் ரசிகர்களை ரசிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் இருந்து ’அயலா அயலா’ என்ற இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். ’அயலா அயலா’ பாடலை நரேஷ் ஐயர், ரிடே ஆகியோர் பாடியுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு அயலான் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ’வேற லெவல் சகோ’ வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஷாருக்கான் உடன் மோதும் பிரபாஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முந்தப்போவது யார்?

ABOUT THE AUTHOR

...view details