நடிகர் தனுஷ், மார்வெல் சூப்பர் ஹீரோ படங்கள் மூலம் பிரபலமான ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோரின் இயக்கத்தில் 'தி க்ரே மேன்' என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்தப் படத்தின் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தி கிரே மேன் படம் குறித்தும் அதில் நடித்த அனுபவம் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் தனுஷ் பதிலளித்துள்ளார். தொடர்ந்து முக்கிய அறிவிப்பையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
'தி க்ரே மேன்' திரைப்படம் வரும் 20 ஆம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகளுக்காக, படத்தை இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ் திரைப்பட இயக்குநர்களான ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோர் இந்தியாவிற்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ராம் பொத்தினேனி - சிம்பு சந்திப்பு.. வைரலாகும் பியர்ட் பாய்ஸ் புகைப்படம்!