தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் ஹிட்.. 6-வது இடத்தில் 'அவதார் 2'

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான "அவதார்2" திரைப்படம் உலகளவில் இரண்டு பில்லியன் டாலர் வசூலை குவித்துள்ளது. உலகளாவிய பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்ஸில் அவதார்2 ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது.

Avatar
Avatar

By

Published : Jan 23, 2023, 4:52 PM IST

லாஸ் ஏஞ்சல்ஸ்: அவதார் முதல் பாகத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் "அவதார்2" திரைப்படத்தை இயக்கினார். அவதார் இரண்டாம் பாகம், 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் கடந்த டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. இப்படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை செய்துள்ளது.

வெளியாகி ஆறு வாரங்களே ஆன இந்த திரைப்படம், இரண்டு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அமெரிக்காவில் 598 மில்லியன் அமெரிக்க டாலரையும், வெளிநாடுகளில் 1.4 பில்லியன் டாலரையும் வசூலித்துள்ளது. சீனாவில் 229 மில்லியன் டாலர், பிரான்சில் 129 மில்லியன் டாலர், ஜெர்மனியில் 117 மில்லியன் டாலர், கொரியாவில் 96 மில்லியன் டாலர், பிரிட்டனில் 81 மில்லியன் டாலரும் வசூலித்துள்ளதாக தெரிகிறது.

உலகளவில் இரண்டு பில்லியன் டாலர் வசூலை குவித்த திரைப்படங்களின் பட்டியலில் தற்போது "அவதார்2" இணைந்துள்ளது. இந்த வரிசையில், 13 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அவதார் திரைப்படம் 2.9 பில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. 'அவெஞ்சர்ஸ்: தி எண்ட் கேம்' திரைப்படம் 2.79 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. டைட்டானிக் திரைப்படம் 2.19 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த வரிசையில் ஆறாவது இடத்தில் அவதார்2 திரைப்படம் இடம்பெற்றுள்ளது. உலகளாவிய பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்ஸில் உள்ள முதல் ஆறு படங்களில் மூன்று படங்களை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த ஆறு படங்களில், அவதார் பட நடிகை ஜோ சல்தானா நான்கு படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு 2 பில்லியன் டாலர் வசூலைக் குவித்த முதல் திரைப்படம் அவதார்2 ஆகும். இரண்டு பில்லியன் டாலர் வசூலை குவித்த மூன்று படங்களை இயக்கியுள்ள ஒரே இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆவார்.

முன்னதாக அவதார்2 படத்தின் வெற்றியைப் பற்றி பேசிய கேமரூன், ஓடிடி உள்ளிட்ட பிற வெளியீடுகளின் ஆதிக்கம் உள்ள தற்போதைய காலகட்டத்திலும், திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பதை மக்கள் இன்னும் விரும்புகிறார்கள் என்பதையே அவதார்2 திரைப்படத்தின் வசூல் காண்பிக்கிறது என்று கூறினார்.

இதையும் படிங்க: 'அவதார் 2' சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றது!

ABOUT THE AUTHOR

...view details