பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சாம் வொர்திங்டன், ஜோ சல்தானா நடிப்பில் உருவாகிய அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் டிசம்பர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் 160 மொழிகளில் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி வசூலிலும் சக்கை போடு போட்டுவருகிறது. இந்த படம் வெளியாகிய மூன்று நாட்களில் சுமார் 3,598 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. 10 நாள்களில் அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.7,000 கோடியை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை புரிந்துள்ளது.