தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

சுதந்திரம் பற்றிய 'ஆகஸ்ட் 16, 1947' படம் - குடியரசு தினத்தில் வெளியான போஸ்டர்! - ஏஆர் முருகதாஸ்

ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்சன் தயாரித்துள்ள, இந்தியாவின் சுதந்திரம் பற்றிய 'ஆகஸ்ட் 16, 1947' படத்தின் எக்ஸ்க்ளூசிவ் போஸ்டரை குடியரசு தினத்தையொட்டி இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

August
August

By

Published : Jan 26, 2023, 5:49 PM IST

சென்னை: பொன்குமார் இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள படம் "ஆகஸ்ட் 16, 1947". இந்த படத்தை ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரியுடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கிறார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக தைரியமாக வெகுண்டெழுந்த இந்தியர்கள் பற்றி இந்தப் படம் பேசுகிறது.

இப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்த எபிக் பீரியட் ட்ராமா குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குடியரசு தினத்தையொட்டி இன்று(ஜன.26) படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கண்ணைக் கவரும்படி அமைந்துள்ள இந்தப் போஸ்டர் படத்தின் ஆன்மாவைத் தாங்கி நிற்கிறது. படத்தின் நாயகன் உள்பட அனைவரும் கைகளில் தீப்பந்தத்தை ஏந்தியபடி காணப்படுகின்றனர். இந்தப் போஸ்டர் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: Ayali webseries review: பெண்ணியம் போற்றும் 'அயலி'-க்கு குவியும் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details