நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி, தொலைக்காட்சித்தொடர்களிலே மிகவும் வெற்றிகரமானத் தொடராக நீடித்து வரும் தொடர் தான் ’பிக் பாஸ்’. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்தத்தொடரின் அடுத்த சீசன் தொடங்கவுள்ள நிலையில், இந்த சீசனில் பொதுமக்களும் பிக் பாஸ் போட்டியாளர்களாக கலந்துகொள்ளலாம் என ஒரு புரொமோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தத் தொலைக்காட்சியில், முன்னாள் பிக் பாஸ் புகழ் ராஜூவை வைத்து ஓர் விளம்பரப்படத்தின் மூலம் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது.