தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அதர்வாவின் ’குருதி ஆட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! - யுவன் சஷங்கர் ராஜா

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ’குருதி ஆட்டம்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதர்வாவின் ’குருதி ஆட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அதர்வாவின் ’குருதி ஆட்டம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By

Published : Jul 13, 2022, 9:09 PM IST

'எட்டு தோட்டாக்கள்' திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'குருதி ஆட்டம்'. இதில் அதர்வா, பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ராக்போர்ட் இன்டர்நேஷனல் சார்பில் டி. முருகானந்தம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கடந்து ஆண்டே வெளியாக வேண்டிய இப்படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக பல்வேறு முறை வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் 5ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:’சிவி’ படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 22 வெளியாகிறது

ABOUT THE AUTHOR

...view details