சென்னை:இயக்குநர் பிரசாந்த் முருகேசன் இயக்கத்தில், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல் மற்றும் தொகுப்பாளர் டிடி நடிப்பில் உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ் “மத்தகம்” வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. Screen Scene Media Entertainment இந்த் தொடரை தயாரித்துள்ளது. இதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் அதர்வா, மணிகண்டன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே பேசியதாவது, ”இயக்குநருக்கு நன்றி. பிரசாந்த் இயக்கத்தில் பணிபுரிய வேண்டும் என்பது என் ஆசை. ஒரு முழு இரவில் நடக்கிற கதை. இதுக்காக அதர்வா, மணிகண்டன் குழு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்கள் எல்லோருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் என நினைக்கிறேன் நன்றி”.
நடிகர் மணிகண்டன் பேசியதாவது, ”என்னுடைய சிறு முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வந்த பத்திரிக்கையாளர்களுக்கு எனது நன்றி. இந்த சீரியஸ் பொறுத்த வரை எனக்கு மிகவும் எதிர்பார்ப்புக்கு மீறிய கதாபாத்திரம். இந்த சீரியஸின் படப்பிடிப்பு இரவில் தான் அதிகம் நடைபெற்றது. இயக்குநரின் உழைப்பு தான் அந்த நேரத்திலும் எங்களை ஊக்குவித்தது. இந்த சீரியஸில் நிறைய சிறு கதாபாத்திரங்கள் உள்ளது. ஆனால் சிறு கதாபாத்திரம் என்றாலும் அதற்கென தனி மெனக்கெடலைக் கொடுத்துள்ளனர். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் இடைவிடாத பணியைக் கொடுத்துள்ளனர்". என்றார்
நடிகர் அதர்வா பேசியதாவது, “இப்போது ரிலீசாகும் மத்தகம் 2018, 19இல் ஆரம்பிக்கப்பட்டது. கௌதம் மேனன் தான் இயக்குனர் பிரசாத் முருகேசனை அறிமுகம் செய்து வைத்தார். இந்தக் கதை முதலில் பைபிள் பேர்ல இருந்தது. பல மாற்றங்கள் வந்தது. எப்படி வரப்போகுதுன்னு தயக்கம் இருந்தது. இப்போது வெளி வர காரணம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான், அவங்களுக்கு ரொம்ப நன்றி.
மத்தகம் கதை மிகவும் நன்றாக வந்துள்ளது. முழுவதும் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம். லைட் ஆஃப் பண்ணி எடுத்தாங்க, நான் கேமராவில் தெறிகிறேனா என சந்தேகமாக இருந்தது. ஆனால் நான் நடிச்சதில பெஸ்ட்டாக இருக்கும். இப்ப நான் எங்க போனாலும் மணிகண்டன் பத்தி கேட்குறாங்க. அவர் கூட 2 நாள் தான் ஷூட் அப்பவும் தனித்தனியா வச்சு எடுத்தாங்க. உண்மையில் மணி ரொம்ப ஹானஸ்டான மனிதர் அவர் கூட வேலை பார்த்தது சந்தோசம்” என பேசினார்.