தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

இனிமேல் மெயின் ரோல் மட்டும்தான் - பாபி சிம்ஹா - going to play the main role

இனிவரும் படங்களில் லீட் ரோலில் மட்டுமே நடிக்க உள்ளதாக, வசந்த முல்லை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பாபி சிம்ஹா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 6, 2023, 8:27 PM IST

பாபி சிம்ஹா நடித்துள்ள 'வசந்த முல்லை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா (Vasantha Mullai movie trailer) நேற்று (பிப்.5) சென்னையில் நடைபெற்றது. அதில் பாபி சிம்ஹா, அவரது மனைவி ரேஷ்மி, இயக்குனர் ரமணன் புருஷோத்தமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாபி சிம்ஹாவின் மனைவியான ரேஷ்மி,ரொம்ப நாட்களுக்கு பிறகு மேடையில் பேசுவதாகவும், வசந்த முல்லை கதையை கேட்டவுடன் பிடித்திருந்ததால் உடனே பாபியிடம் இதை பண்ணலாம் என்றதாகவும் தெரிவித்தார். ’எப்போதும் வெற்றியோடு இருக்கும்போது நிறைய பேர் வருவார்கள்; அவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் வரும். ஆனால், நாம் கீழே இருக்கும்போது நம்மீது நம்பிக்கை வைக்கும் உறவுகள் மிகவும் முக்கியம்' என்று பேசினார். மேலும் பேசிய அவர், இப்படத்தின் தயாரிப்பாளர் ராம் அப்படிப்பட்டவர் என்றும்; கரோனாவால் இப்படம் கொஞ்சம் தாமதமானதாகவும்; இப்படத்தில் நீண்‌ட‌தூரம் பயணித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தங்களுடைய அனைத்து விதமான உணர்வுகளையும் இப்படத்தில் காணலாம் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய பாபி சிம்ஹா, 'உங்களை சந்தித்து ரொம்ப வருஷம் ஆகிவிட்டது. ’பேட்ட’ படத்துக்கு பிறகு பார்க்கிறேன். கடந்த ஆண்டு மகான் பண்ணினேன். ஆனால் அது ஓடிடி. சிவராஜ்குமாரிடம் ஒரு மெசேஜ்தான் பண்ணினேன். உடனே ட்ரெய்லரை ரிலீஸ் பண்ணி கொடுத்தார். சிரஞ்சீவியும் அப்படித்தான். ஒரு குறும்படம் பார்த்தேன். அது மூலம் தான் ரமணன் வந்தார். அவர் சொன்ன கதைதான் வசந்த முல்லை. ஒரு ஸ்ட்ராங்கான படம். ஒரு பரிசோதனை முயற்சியும் கூட. கரோனா சமயத்தில் மிகுந்த இடையூறுகளுக்கு இடையே இப்படம் உருவானது’ என்று தெரிவித்தார்.

இனிமேல் மெயின் ரோல் மட்டும்தான் - பாபி சிம்ஹா

’ஆர்யா நான் கேட்டதும் உடனே நடித்துக் கொடுத்தார். நன்றி. ஆரம்பத்தில் யார் கேட்டாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன். அதன்பிறகு நமக்கான கமர்ஷியல் வேல்யூவை புரிந்து கொண்டு நடிக்கத் தொடங்கினேன். சூப்பர் ஸ்டாரை பார்த்து வளர்ந்தவன். நான்‌ அவரை காப்பி அடிக்கவில்லை. ஆனால், அவரை உள்வாங்கியுள்ளேன். ஜிகர்தண்டா 2 படத்தில் எனக்கான ஸ்பேஸ் இல்லை. அதனால், நடிக்கவில்லை. தெலுங்கில் சிரஞ்சீவி படத்தில் நடிக்கப் போகிறேன் என்பதால் அதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இனி லீட் ரோல் பண்ணுவதில் கவனம் செலுத்த உள்ளேன்‌' என்றார்.

இதையும் படிங்க: "உழவன் பவுண்டேசன்" மூலம் உழவர் விருதுகளை வழங்கிய நடிகர் கார்த்தி

ABOUT THE AUTHOR

...view details