தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஆர்யா, தற்போது முத்தையா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பு ஆர்யாவின் பிறந்தநாளையொட்டி நேற்று(டிச.10) வெளியிடப்பட்டது. படத்திற்கு காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் காதலித்து கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இதுவரை குழந்தையின் முகத்தை வெளியில் காட்டாமல் இருந்தனர். இன்று ஆர்யாவின் பிறந்தநாளையொட்டி சாயிஷா தனது இன்ஸ்டாகிராமில் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.