தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அடுத்தடுத்து சரிவை சந்திக்கும் ஆர்யா! - சினிமா செய்திகள்

தற்போது வெளியாகியுள்ள ஆரியாவின் கேப்டன் படமும் ரசிகரகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அரண்மனை 3, எனிமி படங்களை தொடர்ந்து இந்த படமும் சரிவை சந்தித்துள்ளது.

அடுத்தடுத்து சரிவை சந்திக்கும் ஆர்யா!
அடுத்தடுத்து சரிவை சந்திக்கும் ஆர்யா!

By

Published : Sep 8, 2022, 8:42 PM IST

நடிகர் ஆர்யா 2005 ஆம் ஆண்டு விஷ்ணு வர்தன் இயக்கத்தில் வெளியான ’அறிந்தும் அறியாமலும்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து சாக்லேட் பாய் இமேஜுடன் தமிழ் சினிமாவில் வலம் வந்த அவர், பாலா இயக்கிய ’நான் கடவுள்’ மூலம் நல்ல நடிகராகவும் உருவெடுத்தார்.

பிறகு காதல், காமெடி , ஆக்ஷன்‌ என அனைத்து வகையான படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ’சார்பட்டா பரம்பரை’. பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கபிலன் என்ற கதாபாத்திரத்திற்காக தன்னையே வருத்திக்கொண்டு நடித்தார்.

அதன்பிறகு வெளியான ’அரண்மனை 3’ மற்றும் விஷாலுடன் இணைந்து நடித்த ’எனிமி’ ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. இந்நிலையில் தனக்கு ’டெடி’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் மீண்டும் ’கேப்டன்’ என்ற படத்தில் நடித்தார்.

அர்னால்டு நடித்த ’பிரிடேட்டர்’ படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் இன்று (செப். 8) திரையரங்குகளில் வெளியாகின. ஆனால், படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவரவில்லை என்று கூறப்படுகிறது. கதையாக நன்றாக இருந்தாலும் கிராபிக்ஸ் காட்சிகள் சொதப்பியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால் படம் வெகுஜன ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம்தான். நல்ல நடிகரான ஆர்யா சமீபகாலமாக சரியான கதைத் தேர்வு இல்லாததால் தொடர் தோல்விப் படங்களை கொடுத்து வருகிறார். இந்த நிலை எப்போது மாறும் என்ற எண்ணத்தில் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:Surya 42: சூர்யா - சிறுத்தை சிவா இணையும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி

ABOUT THE AUTHOR

...view details